2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நேர அட்டவணையை மீறும் தனியார் பஸ் சாரதிகளுக்கு தண்டனை

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 08 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

யாழ்ப்பாணத்தில் தனியார் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பஸ் சாரதிகள் புதிதாக வெளியிடப்பட்டுள்ள நேர அட்டவணையை கடைப்பிடிப்பதற்கு தவறினால் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படுமென யாழ். அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் இன்று தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் புதிதாக வெளியிடப்பட்ட நேர அட்டவணையை மீறியவர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், தீபாவளி தினத்தில் தனியார் பஸ்கள் விசேட சேவையில் ஈடுபடுத்தப்படும். தீபாவளியையொட்டி பொதுமக்களின் நலன் கருதி 3 நாட்கள் விசேட சேவை மேற்கொள்ளுமாறு நேர அட்டவணை தனியார் போக்குவரத்து சேவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், யாழ். அரச அதிபர் மேலும் கூறினார்.

பலாலி, காங்கேசன்துறை சேவைகள்  துரிதப்படுத்தப்பட்டுள்ளன. வீதி அபிவிருத்தி வேலைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .