2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

இறந்தவர்களின் ஊழியர் சேமலாப நிதியினை உரித்துடையவர்கள் பெற முடியும்: பிரதி தொழில் ஆணையாளர்

A.P.Mathan   / 2012 நவம்பர் 10 , மு.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

தொழில் நிமிர்த்தம் இறந்த ஊழியர்களின் ஊழியர் சேமலாப நிதியினை உரித்துடையவர் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக வடமாகாண பிரதித் தொழில் ஆணையாளர் கே.கனகேஸ்வரன் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

வடமாகாணத்தில் தொழில் நேரத்தில் இறந்தவர்களின் ஊழியர் சேமலாப நிதியினை உரித்துடையவர்கள் பெறுவதற்கான நடைமுறை இதுவரை காலமும் இருக்கவில்லை. அந்த ஊழியர் சேமலாப நிதியினை உரித்துடையவருக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளும், நிதியை பெறுவதற்கான சான்று உபகரணங்களும் தொழில் அமைச்சினால் வடமாகாண பிரதி தொழில் ஆணையாளர் அலுவலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

2013 ஜனவரி முதல் வடமாகாண பிரதி தொழில் ஆணையாளர் அலுவலகத்தில் உயிரிழந்தவர்களின் ஊழியர் சேமலாப நிதியினை உரித்துடையவர்கள் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் நடைபெறும் என வடமாகாண பிரதித் தொழில் ஆணையாளர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X