2024 மார்ச் 28, வியாழக்கிழமை

புனர்நிர்மாணம் செய்யப்பட்ட காந்தி சிலை திறப்பு

Super User   / 2012 நவம்பர் 12 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி, எஸ்.கே.பிரசாத்)

யாழ். அரியாலை பகுதியில் சேதமாக்கப்பட்ட காந்தி சிலை புனர்நிர்மாணம் செய்யப்பட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. யாழ். இந்திய துணை உயர் ஸ்தானிகர் எஸ். மகாலிங்க நேற்று ஞாயிற்றுக்கிழமை மலர் மாலை அணிவித்து சிலையை மீண்டும் திறந்து வைத்தார்.

உடைக்கப்பட்ட காந்தியின் சிலை கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் யாழ். மாநகர சபை ஆகியன இணைந்து இந்திய சிற்ப வடிவமைப்பாளர் புருஷோத்தமனினால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை கடந்த ஜுன் 28ஆம் திகதி சேதமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அரியாலை காந்தி சனசமூக நிலையத்தினரால் வருடா வருடம் நடத்தப்பட்டு வரும், காந்தி புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 50 மாணவர்களுக்கு 40,000 ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் நேற்று இடம்பெற்றது.

யாழ். துணை உயர் ஸ்தானிகர் எஸ். மகாலிங்கம் மற்றும் யாழ். மாநகர சபை சுகாதார குழு தலைவர் எஸ். விஜயகாந்த ஆகியோர் வழங்கிவைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X