2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

யாழின் சில பகுதிகளில் மின்தடை

Kogilavani   / 2012 நவம்பர் 16 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                (எஸ்.கே.பிரசாத்) 
வீதி அகலிப்பு பணிகளுக்காக உயரழுத்த மற்றும் தாழழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்யவேண்டியுள்ளதாலும்  புதிய உயரழுத்த மின் மார்க்கங்களை இணைக்க வேண்டியுள்ளதாலும் யாழில் ஒருசில இடங்களில் மின்விநியோகம் தடைப்படுமென யாழ்.பிராந்திய மின்பொறியியலாளர் தெரிவித்துள்ளார். 

இதனடிப்படையில், நாளை சனிக்கிழமை 'உரும்பிராய், கோண்டாவில், மருத்துவபீட பிரதேசம், திருநெல்வேலி பிரதேசம், பட்டணப்பகுதி, யாழ்.மாநகரசபை பகுதி, ஸ்ரான்லி வீதி, நாச்சிமார் கோவிலடி முதல் தட்டார்தெரு ஊடாக மனோகரா தியேட்டர் வரையான பிரதேசம், கரந்தன், ஊரெழு, நீர்வேலி, சிறுப்பிட்டி, கோப்பாய், இருபாலை, கல்வியங்காடு, நல்லூர், செம்மணி, அரியாலை, நாவற்குழி, கைதடி, கைதடி வடக்கு, நுணாவில், சாவகச்சேரி, மட்டுவில் ஆகிய இடங்களிலும் மின்விநியோகம் தடைப்படும்.

இதேவேளை, நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை உரும்பிராய், கோண்டாவில், மருத்துவபீடப் பிரதேசம், திருநெல்வேலி பிரதேசம், பட்டணப்பகுதி, யாழ்.மாநகரசபைப்பகுதி, ஸ்ரான்லி வீதி, நாச்சிமார் கோவிலடி முதல் தட்டார்தெரு ஊடாக மனோகரா தியேட்டர் வரையான பிரதேசம், கரந்தன், ஊரெழு, நீர்வேலி, சிறுப்பிட்டி, கோப்பாய், இருபாலை, கல்வியங்காடு ஆகிய இடங்களிலும் மின்விநியோகம் தடைப்படும்               

எதிர்வரும் 19, 21, 23 ஆகிய தினங்களில் அளவெட்டி, மல்லாகம் ஒரு பகுதி, பன்னாலை, வித்தகபுரம், சிறுவிளான், விளான், அம்பனை, கோண்டாவில், இருபாலை வீதி பிரதேசம் ஆகிய இடங்களிலும் 20ஆம் திகதி 8.30 மணியிலிருந்து மாலை 6.00 மணிவரையும் கரந்தன், ஊரெழு, நீர்வேலி, சிறுப்பிட்டி, கோப்பாய், இருபாலை, கல்வியங்காடு, சாமியன் அரசடி பிரதேசம், சம்மந்தர் கடைப் பிரதேசம் ஆகிய இடங்களிலும் 21ஆம் திகதி 8.30 மணியிலிருந்து மாலை 6 மணிவரையும் மந்திகை, கிராமக்கோடு, தம்பசிட்டி, ஓராம் கட்டை சந்தி, சாரையடி, புலோலி, பருத்தித்துறை நகரப் பிரதேசம் ஆகிய இடங்களில் காலை 8.30 மணி தொடக்கம் 5.30 மணிவரை மின் விநியோகம் தடைப்படும்' என்று அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதிகளில் வேலைகளை விரைவாக முடிப்பதற்கு ஓலைகள், பனை ஓலைகள் என்பவற்றை வெட்டியகற்றி தடையற்ற மின்சார விநியோகத்தை பெற்றுக்கொள்ள மின்சார சபைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் கேட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X