2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஜப்பானிய தூதுவர் யாழ். விஜயம்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 17 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சுமித்தி)


யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பானிய தூதுவர் நோபுஹிட்டோ ஹோபு தெல்லிப்பளை மீள்குடியேற்ற மக்களுக்கு குடிநீர் வசதி மற்றும் வாழ்வாதார உதவி திட்டங்களை; இன்று சம்பிரதாய பூர்வமாக வழங்கி வைத்தார்.

தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மீள்குடியேற்ற பகுதியில் சமூக செயற்பாட்டு மையத்தின் ஊடாகவும் தெல்லிப்பளை மீள்குடியேற்ற பகுதி மக்களுக்கு 5.153 மில்லியன் ரூபா நிதியில் குடிநீர் மற்றும் வாழ்வாதார மற்றும் வாழ்வாதார உதவி திட்டங்களை தெல்லிப்பளை பிரதேச செயலாளர் முரளிதரனிடம் கையளித்தார்.

அதேவேளை, தெல்லிப்பளை வலித்தூண்டல் புனித அன்னம்மாள்  கடற்றொழிலாக்ளர் கூட்டுறவு சங்க கடற்றொழிலாளர்களுக்கு கடற்றொழில் உபகரணங்களான கட்டுமரம், வெளியிணைப்பு இயந்திரம், வலை பேர்னற உபகரணங்களும் கையளிக்கப்பபட்டன.

குடிநீர் வசதி செயற்திட்டம் 924,417 மில்லியன் நிதியிலும், வாழ்வாதார உதவி வழங்கல் செயற்திட்டம் ரூபா 4,228,780 நிதியிலும் செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஜப்பானிய நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட கிணற்றினை ஜப்பானிய தூதுவர் பார்இவியிட்டதுடன், கடற்றொழிலாளர்களுடன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அதேவேளை, வலித்தூண்டல் புனித அன்னம்மாள் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவரினால் ஜப்பானிய தூதுவருக்கு மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .