2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நீண்ட நாட்களுக்கு பின்னர் யாழில் ஜூரி சபை விசாரணை

Super User   / 2012 நவம்பர் 21 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி, எஸ்.கே.பிரசாத்)

யாழ். மேல் நீதிமன்றில் ஜூரி சபை (அறங்கூறும் அவை) முன்னிலையில் கொலைக்குற்ற வழக்கு விசாரணை இன்று புதன்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்டது.

2007ஆம் ஆண்டு அச்சுவேலி பகுதியில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடையவர்கள் என கருதும் ஐந்து சந்தேக நபர்களே இந்த விசாரணையில் உட்படுத்தப்பட்டனர்.

சில வழக்குகளிற்கு தேவை ஏற்படும் போது ஜூரி சபை முன்னிலையில் விசாரணைகள் மேற்கொள்வது வழக்கம். இதன் அடிப்படையில் இன்று யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளர் ஜே. விஸ்வநாதன் முன்னிலையில் இந்த விசாரணை இடம்பெற்றது.

யாழ். மாவட்டத்தில் மிக நீண்ட காலத்திற்கு பின்னர் ஜூரி சபை விசாரணை இடம்பெற்றதென்பது குறிப்பிடத்தக்கது.

ஏழு உறுப்பினர்கள் கொண்ட இந்த யூரிமார் சபையின் முன்னிலையில் அரம்பமான இந்த வழக்கு விசாரணை நாளை வியாழக்கிழமை காலை 10.30 மணி வரை யாழ். உயர் நீதிமன்ற ஆணையாளர் விஸ்வநாதன் ஒத்திவைத்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .