2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

உருளைக் கிழங்கு இறக்குமதிக்கான வரி அதிகரிக்கப்படும்: ஜனாதிபதி உறுதி

Kogilavani   / 2013 பெப்ரவரி 11 , பி.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

உள்ளூரில் உருளைக்கிழங்கு அறுவடை செய்யும் காலப்பகுதியில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உருளைக் கிழங்கிற்கான இறக்குமதிக்கான வரியினை அதிகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி விசாயிகளுக்கு தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சுன்னாகம் யாழ்.ஒளி மின் நிலையத்தினை திறந்து வைத்து அங்கிருந்து திரும்பும் வழியில் சுன்னாகம் பகுதியில் வைத்து விசாயிகளுடன் கலந்துரையாடினார்.

இக்கலந்துரையாடலின் போது, உருளைக்கிழங்கு அறுவடை காலத்தில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதால்,  உள்ளூர் சந்தைகளில் உள்ளூர் உருளைக் கிழங்கு விற்பனை செய்யப்படாமல் தேங்கி பழுதடைந்து போவதாகவும் தாம் பெரிதும் நஷ்டத்திற்குள்ளாவதாக விவசாயிகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

இதன்போது, உருளைக்கிழங்கு அறுவடை செய்யப்படும் காலத்தில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவிற்கு எழுத்து மூலம் தெரியப்படுத்தும்பட்சத்தில் அவர் தனக்கு இதுபற்றி தெரியப்படுத்துவார் என்றும் தான் உடனடியாக உரிய அமைச்சின் ஊடாக உருளைக்கிழங்கு இறக்குமதிக்கான வரி அறவீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் விவசாயிகளுக்கு ஜனாதிபதி உறுதியளித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .