2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பொது எதிரணி கூட்டணியில் இணைவது குறித்து தீர்மானமில்லை: த,தே.கூ

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 13 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

'பொது எதிரணிக் கூட்டமைப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இணைந்து செயற்படுவது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை' என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

'நாட்டில் நடைபெற்று வரும் சர்வதிகார குடும்ப ஆட்சிக்கு எதிராக பொது எதிரணிக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளமை வரவேற்றத்தக்கது. அதில் கையொப்பமிடுதல், செயற்படுதல் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே முடிவெடுக்கப்படும்' என்றார்.

அத்துடன், 'தமிழ் மக்களுக்கு பல பிரச்சனைகள் இருக்கின்றன. இதனை தீர்ப்பதற்கு பொது எதிரணிக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை அறிய வேண்டிய தேவையும் இருக்கிறது' என்று அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0

  • Sumathy m Wednesday, 13 February 2013 05:34 PM

    சரியாக சொன்னீர்கள். தமிழ் மக்களுக்கு ஊண், உடை ,உறையுள் உட்பட பலவிதமான பிரச்சினைகள் உள்ளன. இதுவரை காலத்தில் அவர்களது வாட்டத்தைப்பற்றி வீர முழக்கம் செய்தீர்களே தவிர அவர்களது வாட்டத்தை போக்க என்ன செய்தீர்கள்? ஆனால் வெளிநாட்டில் உல்லாசமாக வாழும் கூட்டமைப்பு தலைவர்களின் குடும்பத்தினர்களிற்கு எதுவித பிரச்சினைகளும் இல்லை. யுத்தத்தை முன்னின்று நடத்தி எமது உறவுகளை கொன்று குவித்த சரத் பொன்சேகாவை தேர்தலில் ஆதரித்து பிரச்சாரம் செய்யும்போது எந்த நிபந்தனைகளை முன்வைத்தீர்கள்?.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .