2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

உண்ணாவிரதப் போராட்டத்தின் மீது தாக்குதல்

Kanagaraj   / 2013 பெப்ரவரி 15 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


உண்ணாவிரதப்போராட்டத்தின் மீது சிவில் உடையில் வந்த இனந்தெரியாத நபர்களே சற்றுமுன்னர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வலி.வடக்கு இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றக் குழு ஏற்பாடு செய்துள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டு வெளியேறியதன் பின்னரே அந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

உண்ணாவிரதத்தில் பங்கேற்ற ரணில் அங்கு உரையாற்றை நிறைவு செய்தபோது கூட்டத்தில் கூட்டத்தோடு நின்றவர்கள் ஹு சத்தம் எழுப்பியுள்ளனர்.

அவர், தனது உரையை நிறைவு செய்துக்கொண்டு அவ்விடத்தை விட்டு வெளியேறியதன் பின்னர் அந்த இனந்தெரியாத நபர்கள் நால்வரும் உண்ணாவிரதம் நிறைவடைந்து விட்டது சகலரும் எழுந்து செல்லுமாறு பகல் 11.30 மணியளவில் அச்சுறுத்தியதுடன் அவர்கள் ஏந்தியிருந்த பதாகைகளையும் கிழித்தெரிந்தனர் என்று எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இதன்போது இனந்தெரியாத நபர்களுடன் உண்ணாவிரதபோராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர்களும் அந்த நபர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இனந்தெரியாத நபர்களில் ஒருவரை பிடித்து தெல்லிப்பழை பொலிஸாரிடம் ஒப்படைத்துமுள்ளனர்.

மற்றுமொருவர் ஊடகவியாளர்களின் புகைப்பட கருவியொன்றையும் அபகரித்துக்கொண்டு ஓடிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் இடத்தில் ஒரு பதற்றமான சூழ்நிலை காணப்படுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0

  • Amalan Friday, 15 February 2013 10:50 AM

    1948 ஆம் ஆண்டில் இருந்து முதன் முதலில் திருகோணமலையில் சிங்கள குடியேற்றங்களை ஆரம்பித்தது ஐக்கியதேசிய கட்சிதான். அந்த கட்சி போட்ட திட்டங்களைத்தான் இன்று மஹிந்த ராஜபக்ச அரசு இன்னும் மேலதிக திட்டங்களை போட்டு நடைமுறைப்படுத்துகின்றது. இந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்க இந்த உண்ணாவிரத போராட்டத்தில் எந்த முகத்துடன் கலந்துகொண்டார்? அல்லது ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றால் அவரால் சிங்கள குடியேற்றங்களை தடுக்க முடியுமா? இராணுவம் பறித்த தமிழா்களின் காணிகளை அவரால் மீள பெற்றுக் கொடுக்க முடியுமா? ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியின்போதுதான் 1990 ஆண்டு வலிகாமம் பிரதேசத்தில் இருந்து மக்கள் இடம்பெயா்ந்தனா் என்பதை ரணில் விக்கிரமசிங்க அறிவாரா?

    Reply : 0       0

    unpyouthampara Friday, 15 February 2013 03:13 PM

    தம்பி அமலன்..
    சுமார் 25 வருடங்களின் பின்னர் வடக்கு ää கிழக்கில் பயங்கரவாதமற்ற சூழலை தனது பிரதமர் காலப்பகுதிக்குள் ( 2001-2004 ) ஏற்படுத்தியவர் ரணில் என்பதனை மறக்க வேண்டாம். தவறுகள் ஆங்காங்கே சமபந்தப்பட்ட தரப்புகளில் இழைக்கப்பட்டிருக்கிறது. எதிர்காலத்தில் மீண்டும் தவறுகளும், பிழைகளும் ஏற்படாதவாறு செயற்படுவதே அனைவரினமும் தலையாய கடமை.. தொடர்ச்சியான பிரிவினை வாதமும் இனவாதமும் பழி போடுதலும் இதற்கான தீர்வுகளோ அல்லது ஆக்கபூர்வமான உபாயங்களோ அல்ல..

    Reply : 0       0

    vallarasu Friday, 15 February 2013 03:52 PM

    தம்பி தோல்வி ரணில் இருக்கும் வரை எதிர்க்கட்சி என்று ஒன்று இருக்காதுடா.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .