2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மீண்டும் எங்களை பழைய நிலைக்கு தள்ள அரசு முயற்சி: சரவணபவன் எம்.பி

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 15 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


'மீண்டும் எங்களை பழைய நிலைக்குத் தள்ள அரசு முயற்சிக்கின்றது. இவ்வாறான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளுமாயின் நாமும் அவ்வாறான நடவடிக்கைகளில் இறங்கத் தயங்க மாட்டோம் என்பதை அரசுக்குக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்' என நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.

வுலி. வடக்கில் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

'பலாலி விமானத்தளம் விஸ்தரிப்புக்கான 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு படையினரால் அபகரிப்புச் செய்யப்பட்டுள்ளது. இப்பிரதேசத்தில் விமானத்தள விஸ்தரிப்புக்காகவும் துறைமுறை விஸ்தரிப்புக்காகவும் 2 ஆயிரம் ஏக்கர் நில கையகப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்து வருகின்றது. ஆனால் 24 கிராம அலுவலர் பிரிவிலும் படையினரால் 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு அபகரிக்கப்பட்டுள்ளது' என்று அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

'அத்துடன் தமது நிலங்களில் தங்களை மீள்குடியமர்த்துமாறு மக்கள் ஜனநாயக ரீதியிலான போராட்டம் முன்னெடுத்தபோது இதனைக் குழப்புகின்ற வகையில் இராணுவப் புலனாய்வாளர்களினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான நடவடிக்கைளுக்கு பொறுப்புக் கூறவேண்டிய பொறுப்பு யாழ் கட்டளைத் தளபதி ஹத்துருசிங்கவிற்கு இருக்கின்றது. ஆனால் அவரக்கு பொறுப்புக் கூறல் என்பது பற்றி தெரிவில்லை' என்றும் அவர் தெரிவித்தார்.

'மீண்டும் எம்மை பழைய நிலைக்கு தள்ள அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. தொடர்ச்சியாக அரசாங்கம் இவ்வாறு செய்யுமாயின் நாமும் அவ்வாறான நடவடிக்கைகளில் இறங்கத் தயங்க மாட்டோம் என்பதை அரசுக்குக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்' என்றும் சரவணபவன் எம்.பி மேலும் தெரிவித்தார்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .