2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும்: இரா.சம்மந்தன்

Kogilavani   / 2013 ஜூலை 30 , மு.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.கே.பிரசாத்


'வடக்கில் சுதந்திரமாக தேர்தல் நடைபெறவேண்டும் என்றால் சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும். இவ்வாறு நியமிப்பதன் மூலம்தான் வடக்கில் மக்கள் சுதந்திரமாக ஜனநாயக ரீதியில் தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க முடியும்' என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாக இரா சம்மந்தன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் அலுவகத்தில் நடைபெற்ற வேட்புமனுத்தாக்கல் தொடர்பான ஊடகவியலாளார்; சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'வடமாகாண சபைக்கென முதல் முதலாக தேர்தல் நடைபெறப் போகிறது. மாகாண சபைக்கு மக்கள் தங்கள் பிரதிநிதிகளை முதன் முறையாக அனுப்பப்போகிறார்கள். இதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் உள்ள ஐந்து மாவட்டங்களில் நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்துள்ளது.

வடமாகாண சபைத் தேர்தல் நடைபெறவேண்டும் என்று சர்வதேச சமூகம் எதிர்பார்க்கின்றது. சர்வதேசத்தின் அலுத்தம் காரணமாக இந்த அரசாங்கம் இந்த தேர்தலை நடத்துவதற்கு முன்வந்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தொடரில் இவ் வருடம் தேர்தல் நடாத்தப்படவேண்டும் என்று சர்வதேசம் வலியுறுத்தியதையடுத்து இந்த தேர்தல் நடத்தப்படவுள்ளது.

இந்த தேர்தல் சுதந்திரமாக நடைபெறவேண்டும் என்றால் பொலிஸ் ஆணைக்குழு, தேர்தல் ஆணைக்குழு, பொதுச் சேவை ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படவேண்டும்.

அவ்வாறு நியமிக்கப்படும் போது இந்த தேர்தலில் மக்கள் சுதந்திரமாக ஜனநாயக முறையில் வாக்களிக்க முடியும். அவ்வாறு ஒரு தேர்தல் நடைபெற்றால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதற்கு ஒத்துழைப்ப வழங்கும்.

தேர்தல் காலத்தில் கடமைபுரியும் உத்தியோகஸ்தர்கள் நேர்மையாக தங்கள் கடமையை நிறைவேற்றிக்கொள்வதுடன் பல்வேறு விடயங்களை உறுதி செய்துகொள்வதற்கு சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படவேண்டும்.

தேர்தலில் மக்கள் வாக்களிக்க முடியாத சுதந்திரம் மறுக்கப்படும் பட்சத்தில் அதனைக்கட்டுப்படுத்த நாங்கள் முயற்சிகள் செய்வோம்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X