2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கட்சிக்குள் கருத்து முரண்பாடுகள் இருப்பது அவசியம்: இரா.சம்பந்தன்

Kogilavani   / 2013 ஜூலை 29 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

'ஒரு கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் இருப்பது அவசியமானது. அவ்வாறு கருத்து வேறுபாடுகள் காணப்பட்டால் அதை ஆராய்ந்து தீர்வினை முன்வைக்க முடியும்' என  தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசு கட்சியின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை மாலை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இவ் ஊடகவியலாளர் சந்திப்பில், ' தமிழர் விடுதலை கூட்டணியின் மூன்று உறுப்பினர்கள் இன்று காலை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு கட்சிக்குள் கருத்து முரண்பாடுகள் காணப்படுவது சரியானதா' என உடகவியலாளர்
ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

'கருத்து முரண்பாடுகள் காணப்பட்டால் மாத்திரமே கட்சிக்குள் காணப்படும் பிரச்சினைகளை இணங்காண முடியும்.

சாதியின் அடிப்படையில், வேட்பாளர் தெரிவு இடம்பெறவில்லை. முஸ்லிம் வேட்பாளர்களை நியமிப்பதற்கான கால அவகாசம் கிடைக்கவில்லை. ஆனாலும், 51  வேட்பாளர்களில் ஒரு முஸ்லிம் வேட்பாளர் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அந்தவகையில், இவ்வாறான கருத்து வேறுபாடுகள் இருந்தால், அந்த கருத்துக்களை எடுத்து அனைத்து உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டு, அதற்கான தீர்வினை முன்வைக்க முடியும்' என்று அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .