2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நான் தமிழ்ச்செல்வனின் மாமனில்லை: அருளம்பலம் பாலசுப்பிரமணியம்

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 02 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா
 
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட இடம் தரும் என்ற நம்பிக்கையில் கடந்த நான்கு மாதங்களாக செயல்பட்டபோதிலும் கடைசி நேரத்தில் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டது. அதேபோல் நான் தமிழ்ச்செல்வனின் மாமனாரும் இல்லை என சுயேட்சை வேட்பாளராக யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் அருளம்பலம் பாலசுப்பிரமணியம் கவலை தொவித்துள்ளார்.
 
யாழ்ப்பாணம் ஊடகவியலாளர் மையத்தில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனை தெரிவித்துள்ளார்.
 
வெளிநாடுகளில் இருந்து வரும் புத்திஜீவிகளான நவநீதம்பிள்ளை போன்றவா்களின் தலையீடுகளை தவிர்க்கும் வகையிலும் அதற்க்கு எதிராக செயல்படும் வகையிலும் புத்திஜீவிகளை கொண்ட ஓர் அமைப்பை உருவாக்கவும் நடவடிக்கைகளை ஏற்படுத்தவுள்ளேன்.
 
கடந்த நான்கு மாதங்களில் இராணுவத்தினருடன் இணைந்து பல சேவைகளையும் மக்களுக்கு செய்து வந்துள்ளேன். இந்தவகையில் யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க பல வகைகளிலும் உதவிகளை புரிந்துள்ளார்.
 
சுசில் பிரேமசந்திர கடைசி வரை எனது பெயரானது வேட்பாளர் பட்டியலில் இருப்பதாக தொவித்து வந்தபோதிலும் இறுதி நிமிடத்தில் யாரோ செய்த சதியினால் எனக்கு இடம் கிடைக்கவில்லை. இதன் காரணத்தினால் தான் நான் சுயேட்சையாக ஜனாதிபதியின் கைகளை பலப்படுத்தும் வகையில் இந்த தேர்தலில் இளைஞா்களையும் இணைத்துக் கொண்டு போட்டியிடுகின்றேன்.
 
கீரிமலை முத்த மாரியம்மன் ஆலயத்திற்கான பாதை ஏற்படுத்துதல் மற்றும் மின்சாரம் வழங்குதல் போன்ற பல பணிகளை நானே நிறைவேற்றியுள்ளேன் இராணுவத்தினரின் உதவியுடன். இதேபோன்று கீரிமலை கடற்கரையில் அமைந்துள்ள இந்து மயானத்திற்கு செல்ல முடியாத நிலைமை காணப்படுகின்ற போதிலும் படையினருடன் கதைத்து பிரேதத்தை கொண்டு சென்று எரிப்பதற்காவது அனுமதியளிக்க வேண்டும் என வேண்டுதல் விடுத்துள்ளேன்.
 
சங்கானைப் பகுதயில் எமது உறவினர் ஒருவர் அறக்கட்டளை நிதியம் ஒன்றிற்கு வழங்கிய சுமார் இருபது பரப்புக் காணியை மீள எடுத்து, இடம் பெயா்ந்த மக்களுக்கு குடியிருக்க வழங்கியுள்ளேன். இதேபோன்று சங்கானையில் பத்துப் பரப்புக் காணியில் தொழில் பயிற்சி நிலையம் ஒன்றை ஏழு மாடியில் கட்டவும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன்.
 
மாதகல், பொன்னாலை, காரைநகர், அராலி போன்ற பகுதிகளில் மீன்பிடித் தொழிலாளர்களின் நன்மை கருதி சந்தைகளை அமைப்பதுடன் சந்தைப்படுத்த முடியாத மீனை தென்னிலங்கைக்கு ஏற்றுமதி செய்யவும் நடவடிக்கைகளை மேற்க்கொண்டுள்ளேன்.
 
முன்னாள் போராளிகள் பற்றி சிந்திக்கப்பட வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ் செல்வனின் மாமாதான் நான் என பிழையான தகவலை ஊடகங்கள் பிரசுரித்து எனக்கு எதிராக செயல்பட்டு, பொய் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார்கள். இதில் எந்த வகையான உண்மையும் இல்லையெனவும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .