2024 மார்ச் 28, வியாழக்கிழமை

குடும்பத்தைக் கடத்தி கப்பம் பெற்றவர் இரண்டு வருடங்களின் பின்னர் கைது

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 18 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

குடும்பமொன்றை 2011 ஆம் ஆண்டு கடத்தி 28 இலட்சம் கப்பம் பெற்றதாக கூறப்படும் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக தெரிவித்த யாழ்.பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம். ஜெவ்ரி குறித்த இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

யாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்று (18) வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

2011 ஆம் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திலிருந்த முறைப்பாட்டின் பிரகாரமே மேற்படி சந்தேகநபர் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டு மறுநாள் செவ்வாய்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

இதன்போதே சந்தேகநபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார் என்று ஜெப்ரி மேலும் தெரிவித்தார். 

2011 ஆண்டு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

சாவகச்சேரியைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்திய மர்மநபரொருவர் இராணுவத் தடுப்பிலுள்ள உங்கள் குடும்ப நபரை வெளியில் கொண்டு வந்து அவரை வெளிநாட்டு அனுப்பித் தருவதாகவும் அதற்கு 28 இலட்சம் ரூபா செலவாகும் என்றும் கூறியுள்ளார்.

இதனை நம்பிய மேற்படி குடும்பத்தினர், மர்மநபர் கோரியிருந்த ரூ.28 இலட்சத்;துடன் கொழும்புக்குச் சென்ற வேளையில், வான் ஒன்றில் வந்தவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த மூவரைக் கடத்திச் சென்று அவர்களிடமிருந்த 28 இலட்சம் ரூபாவை கப்பமாகப் பெற்ற பின்னர் அவர்களை விடுவித்திருந்தனர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களினால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட சாவகச்சேரி பொலிஸார் கடந்த செவ்வாய்க்கிழமை இளைஞர் ஒருவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X