2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

யாழில் பெண்கள் அமைப்புக்கள் அடையாள போராட்டம்

Kogilavani   / 2013 டிசெம்பர் 06 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா, சுமித்தி தங்கராசா


யாழ்.மாவட்டத்திலுள்ள பெண்கள் அமைப்புக்கள் இன்று வெள்ளிக்கிழமை  (06) காலை அடையாள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்.மல்லாகம் நீதிமன்றத்திற்கு அருகாமையில் சுமார் 25 இற்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுகூடி இந்த ஆர்ப்பாட்டத்தில்; ஈடுபட்டனர்.

'வழங்கப்படும் தண்டனைகளால் குற்றங்கள் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்', 'எனது மரணமே இறுதியானதாகட்டும்' போன்ற சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்.புத்தூர் கிழக்கு மத்திய சனசமூக நிலையத்திற்கு அருகிலுள்ள கிணற்றிலிருந்து ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி இளம் பெண்ணான அமிர்தலிங்கம் மைதிலி (வயது- 27) என்பவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டது.

இது தொடர்பில் அவரது காதலனான அமிர்தலிங்கம் கிருஷ்ணதீபன் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பிலான வழக்கு இன்று (06) மல்லாகம் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படும் சந்தர்ப்பத்திலேயே யாழ்.மாவட்ட பெண்கள் அமைப்புக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மேற்படி பெண்ணின் கொலை வழக்கினை விசாரித்த மல்லாகம் நீதிமன்ற நீதவான் பஷீர்; மொஹமட் சந்தேக நபரான காதலனை எதிர்வரும் 20 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .