2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல்

Kogilavani   / 2014 மார்ச் 26 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி பொதுசந்தையில் செய்தி சேகரிப்பதற்காக சென்ற பிராந்திய செய்தியாளர் ஒருவர் மீது கரைச்சி பிரதேசபை பணியாளர் ஒருவர் புதன்கிழமை (26) தாக்குதல் நடத்தியதுடன் செய்தியாளரின் புகைப்படக் கருவிகளை அடித்து நொருக்கியதாக குறித்த செய்தியாளரினால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சி பொதுச் சந்தையில் கடந்த 2013 ஆம் ஆண்டிற்கான மின்கட்டணம், வாடகைப்பணம், வரிப்பணம் ஆகியவற்றை செலுத்தாத 30 வர்த்தக நிலையங்களுக்கு சீல் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் செவ்வாய்க்கிழமை (25) மாலை உத்தரவிட்டிருந்தார் என கரைச்சி பிரதேச சபை செயலாளர் ந.கிருஷ;ணகுமார் தெரிவித்தார்.

இதனையடுத்து, இன்று (26) வர்த்தகர்களுக்கும் பிரதேச சபை நிர்வாகத்தினருக்கும் இடையில் முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து செய்தி சேகரிப்பதற்காக அங்கு சென்ற செய்தியாளரை பிரதேச சபை பணியாளர் ஒருவர் தாக்கியுள்ளார் என பொலிஸார் கூறினர்.

இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X