2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கோபியின் நண்பனிடம் துப்பாக்கி ரவைகள்

Menaka Mookandi   / 2014 மார்ச் 28 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பின்னர் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு உயிர் கொடுப்பதற்காக பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படும் கோபி என்ற நபரின் நண்பனிடம் இருந்து துப்பாக்கி ரவைகள் மற்றும் கோபி சம்பந்தப்பட்ட தகவல்கள் பெற்றுக் கொண்டுள்ளதாக யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.விமலசேன இன்று வெள்ளிக்கிழமை (28) தெரிவித்தார்.

யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று (28) இடம்பெற்றது. இதன்போது, 'கடந்த வாரம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து தேடுதல் நடத்தியதுடன், ஒரு இளைஞரை கைதுசெய்துள்ளனர். ஆனால், வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் அவ்விடத்திற்கு சென்று தேடுதல் மற்றும் கைது தொடர்பாகக் வட்டுக்கோட்டைப் பொலிஸாரிடம் கேட்டபோது அதற்கு அவர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். இதற்கான காரணம் என்ன என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளிக்கையிலே விமலசேன மேற்கண்டவாறு தெரிவித்தார், இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

'கடந்த 23ஆம் திகதி வட்டுக்கோட்டைப் பகுதியில் வைத்து மன்னாரைச் சேர்ந்த கோபியின் நண்பனான மாணிக்கம் காந்தலயன் என்ற இளைஞர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்.

அதன்போது, அநேகமான அப்பகுதி பொதுமக்கள் வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு கைதுசெய்யப்பட்டுள்ள குறித்த நபர் நல்லவர் எவ்வித குற்றச்செயல்களிலும் ஈடுபடாதவர் என்று கூறினார்கள்.

இருந்தும், அந்நபரிடம் மேற்கொள்ளப்பட்ட புலன் விசாரணைகளின் போது அநேகமான துப்பாக்கி ரவைகள் மற்றும் கோபி சம்பந்தப்பட்ட தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன' என்றார்.

அத்துடன், தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் யாராவது நடந்து கொண்டால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .