2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கீரிமலையில் பல மடங்கள் அழிந்தும் அழிக்கப்பட்டும் உள்ளன

A.P.Mathan   / 2014 மார்ச் 31 , மு.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

கீரிமலைப் பகுதியில் இருந்த பல மடங்கள் கடந்த காலங்களில் அழிந்தும் அழிக்கப்பட்டும் உள்ளன. அவற்றினை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த யாத்திரிகர் மடமும் சிவபூமி கலைக் களஞ்சியமும் திறக்கப்பட்டுள்ளதாக நகுலேஸ்வர ஆலய ஆதீனகர்த்தா இராஜஸ்ரீ நகுலேஸ்வரக் குருக்கள் தெரிவித்தார்.

சிவபூமி அறக்கட்டளை நிதியத்தின் ஏற்பாட்டில் இலங்கை இந்து மாமன்றம், வி.கைலாயபிள்ளை குடும்பத்தினர் மற்றும் ஏனைய அபிமானிகளின் நிதியுதவிகள் மூலம் கீரிமலை நகுலேஸ்வரத்தில் நிர்மாணிக்கப்பட்ட யாத்திரிகர் மடமும் சிவபூமி கலைக்களஞ்சியமும் நேற்று (30) திறந்து வைக்கப்பட்டன.

இதன்போது உரையாற்றுகையிலே நகுலேஸ்வரக் குருக்கள் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

'கடந்த காலங்களில் இந்தப் பகுதியில் இருந்த பல மடங்கள் அன்னதானம் வழங்குபவையாகவும் தாகசாந்தி தீர்ப்பவையாகவும் காணப்பட்டன. ஆனால் இன்று அவ்வாறு நடைபெறாவிட்டாலும் கூட அதனை ஓரளவுக்கு ஈடுசெய்யும் வகையில் இந்த யாத்திரிகர் மடம் அமைக்கப்பட்டுள்ளது.

கீரிமலை என்ற பெயர் பாவனையிலிருந்து அழிந்து நகுலேஸ்வரம் என்ற பெயர் மேலோங்கத் தொடங்கியுள்ளது. ஆனால், இந்தப் பிரதேசம் யாத்திரிகர்களின் ஸ்தலமாக இருக்க வேண்டும்.

முன்னைய காலங்களில் கீரிமலையில் அமைந்துள்ள பல மடங்களில் சித்தர்கள், யாத்திரிகர்கள் எனப்பலரும் வந்து தங்கிச் செல்லக்கூடிய நிலைமை காணப்பட்டதுடன் பல சித்தர்கள் இங்கே தங்கி வாழ்ந்தும் உள்ளார்கள்.

இத்தகைய நிலைமை இந்தப் பகுதியில் மீண்டும் எற்படுவதுடன் சமயமும் வளர்ச்சி அடைய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .