2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

விபூசிகா தொடர்ந்தும் சிறுவர் இல்லத்தில் இருக்க நீதிமன்றம் உத்தரவு

Kogilavani   / 2014 மார்ச் 31 , பி.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

நீதிமன்ற உத்தரவின் பேரில்  கிளிநொச்சி மகாதேவா சைவச் சிறுவர் இல்லத்தில்  தங்க வைக்கப்பட்டுள்ள பாலேந்திரன் விபூசிகாவினை (வயது 13) தொடர்ந்து வைத்திருக்குமாறு கிளிநொச்சி நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் கிளிநொச்சி மாவட்ட சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரி வி.முத்துக்குமாருக்கு திங்கட்கிழமை (31) உத்தரவிட்டார்.

அத்துடன், சிறுமியை அவரது  வீட்டிற்கு அழைத்துச் சென்று அவருடைய உடமைகளை எடுத்துக் கொள்வதற்கு மாவட்ட நன்னடத்தை அதிகாரிக்கும் பொலிஸாருக்கும் நீதவான் அனுமதியளித்தார்.

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினையடுத்து, சந்தேகநபர் ஒருவர் ஒளிந்திருந்ததாகக் கூறப்படும் வீட்டிலிருந்து யுத்தக்காலத்தில் காணாமற்போனதாக கூறப்படும் இளைஞர் ஒருவரின் தாயும் சகோதரியும் கடந்த 13 ஆம் திகதி கிளிநொச்சி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

பாலேந்திரன் ஜெயக்குமாரி மற்றும் அவரது மகள் விபூசிகா ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர்.

தொடர்ந்து இவர்கள் இருவரும், கடந்த 14ஆம் திகதி கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, பாலேந்திரன் ஜெயக்குமாரி (வயது 50) 3 மாதகாலம் தடுப்புக் காவல் விதிக்கப்பட்டு பூஸா தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டார். அத்துடன் மகள் விபூசிகா வைத்தியச் சான்றிதழ் பெறுவதற்காக சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

மருத்துவச் சான்றிதழ் பெற்று சிறுமியினை கடந்த 17 ஆம் திகதி கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் மாவட்ட சிறுவர் நன்னடத்தை அதிகாரி ஆஜர்ப்படுத்தினார்.

இதன்போது நீதவான் சிறுமியினை திங்கட்கிழமை (31) வரை கிளிநொச்சியிலுள்ள சைவச் சிறுவர் இல்லமான மகாதேவா சைவச் சிறுவர் இல்லத்தில் ஒப்படைத்து பராமரிக்கும்படி சிறுவர் நன்னடத்தை அதிகாரிக்கு உத்தரவிட்டிருந்தார்.

சிறுமியினை  கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் மீண்டும் திங்கட்கிழமை (31) ஆஜர்ப்படுத்தப்பட்டபோதே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .