2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

கண்டாவளை பிரதேச செயலகத்தின் ஆளணி வளங்கள் பூர்த்தி: செயலர்

Kogilavani   / 2014 ஏப்ரல் 04 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலகத்தின் ஆளணி வளங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் மக்களுக்கு துரித சேவைகளை வழங்க முடியும் எனவும் கண்டாவளைப் பிரதேச செயலர் ரி.முகுந்தன் வியாழக்கிழமை (3) தெரிவித்தார்.

கண்டாவளைப் பிரதேச செயலகத்தின் கீழுள்ள கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான தேவைப்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் கண்டாவளைப் பிரதேச செயலர் தலைமையில் வியாழக்கிழமை (03) கண்டாவளைப் பிரதேச செயலக மாநாட்டு மண்பத்தில் நடைபெற்றது.

இதன்போது உரையாற்றுகையிலே பிரதேச செயலர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'கடந்த நான்கு ஆண்டுகளில் கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் மேலும் பல தேவைப்பாடுகள் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கின்றது. இவற்றை முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யவேண்டிய தேவையுள்ளது.

கடந்த காலங்களில் அபிவிருத்தித் திட்டங்கள் விரைவாக முன்னெடுக்க வேண்டியிருந்தது. அந்தச் சந்தர்ப்பங்களில் ஆளணி வளங்களும் பற்றாக்குறையாக இருந்ததினால் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது.

ஆனால், தற்போது கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவின் கீழுள்ள 16 கிராம அலுவலர் பிரிவுகளிலும் சேவையாற்றக்கூடிய வகையில் கிராம அலுவலர்கள், சமுத்தி உத்தியோத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்; ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். 

அதிலும் குறிப்பாக அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான உத்தியோகத்தர்;களே அதிகளவில் நியமிக்கப்பட்டிருப்பதனால் எதிர்காலத்தில் அபிவிருத்;தித் திட்டங்களை விரைவாக முன்னெடுக்க முடியும்.

இதற்கு கிராம ரீதியாகச் செயற்படுகின்ற கிராம மட்ட அமைப்புக்கள் தங்களுடைய  பிரதேசங்களிலேயே காணப்படுகின்ற தேவைப்பாடுகளை முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்து அவற்றை சமர்ப்;பிக்கும் பொழுது அவற்றை விரைவாக முன்னெடுக்க முடியும்' என்று பிரதேச செயலர் மேலும் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில் கண்டாவளைப் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர், கிராம அலுவலர்கள், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், கமக்கார அமைப்புக்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .