2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

எலும்புக்கூடு மீட்பு; மாட்டினுடையதென சந்தேகம்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 09 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, கி.பகவான்

யாழ். கொடிகாமம், கெற்பேலி பகுதியிலுள்ள  தோட்டக் காணியொன்றில் சிதைவடைந்த  எலும்புக்கூடொன்று  புதன்கிழமை  (09) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக   கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 06 மாதங்களுக்கு முன்னர் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட இப்பிரதேசத்திலுள்ள குறித்த  தோட்டக் காணியை  தோட்டச் செய்கைக்காக பண்படுத்தும்போது, இந்த  எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில்,  இது தொடர்பில் கிராம அலுவலருக்கு குறித்த  காணி உரிமையாளர்  தகவல் வழங்கினார். இதனைத் தொடர்ந்து கொடிகாமம் பொலிஸாருக்கு குறித்த கிராம அலுவலகர் தகவல் வழங்கியதாகவும் பொலிஸார் கூறினார். 

குறித்த இடத்திற்குச் சென்ற கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கெற்பேலியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடு மாடு ஒன்றினுடையதாக இருக்கலாம் என யாழ். போதனா வைத்தியசாலை சிரேஷ்ட சட்ட வைத்தியதிகாரி கந்தையா ரட்ணசிங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக   கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.எதிரிசிங்க தெரிவித்தார்.

அவ்விடத்திற்கு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேரகம் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்தியதிகாரி கந்தையா ரட்ணசிங்கம் ஆகியோர் சென்றிருந்தனர்.

இந்நிலையில் குறித்த எலும்புக்கூட்டை பரிசோதித்த  சட்ட வைத்தியதிகாரி அந்த எலும்புக்கூடு மாடொன்றின் எலும்புக்கூடாகவிருக்கலாம் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அதனை பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு நீதவான் சட்ட வைத்தியதிகாரிக்கு உத்தரவிட்டிருந்தார் என்று பொலிஸ் பொறுப்பதிகாரி கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .