2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

முற்போக்கு தமிழ் தேசிய கட்சி உதயம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 15 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமித்தி தங்கராசா, நா.நவரத்தினராசா

யாழ்.மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சுதர்சிங் விஜயகாந்த் முற்போக்கு தமிழ் தேசிய கட்சி என்ற புதிய கட்சி ஒன்றினை ஆரம்பித்துள்ளார்.

இக்கட்சி அங்குரார்ப்பண நிகழ்வு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சனிக்கிழமை (12); யாழ்.குருநகர் சுவர்க்கா விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. இதன்போது, கட்சி சின்னம் மற்றும் கட்சியின் யாப்புக்கள் வெளியிடப்பட்டன.

இக்கட்சி வடமாகாணத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இக்கட்சியின் செயலாளர் நாயகமாக சுதர்சிங் விஜயகாந்த் செயற்படவுள்ளதுடன், பிரதித் தலைவர் உட்பட 12 உறுப்பினர்கள் இக்கட்சியில் உள்ளனர்.

இந்தக் கட்சித் பற்றி செயலாளர் நாயகம் கருத்துத் தெரிவிக்கையில், 

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்;ப்பதற்காக இக்கட்சி புதிதாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.  நிறைகுடம் சின்னத்துடன், ஆரம்பிக்கப்பட்ட இக்கட்சியின் கொடியில் சிவப்பு மற்றும் மஞ்சள் நீலம் ஆகிய நிறங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அதில் சிவப்பு அர்ப்பணிப்பினையும், மஞ்சள் ஒழுக்கத்தினையும், நீலம் ஒற்றுமையினையும் எடுத்துக் காட்டுகின்றது.

தமிழ் மக்களின் நிலம், கலாசாரம், பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றினை மேம்படுத்தும் நோக்கத்துடனும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் பேசித் தீர்க்கப்படவேண்டுமென்றும் என்ற நோக்குடனும் இக்கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

அந்தவகையில், தனி தமிழம் இனி வரும் காலங்களில் கிடைக்கப்போவதில்லை. அவ்வாறு தனி தமிழீழம் கிடைக்குமென்றால், மத்திய அரசாங்கத்துடன், இணைந்து செயற்பட தாம் தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முற்போக்கு சிந்தனையாளர்கள் என்ற அடிப்படையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தமிழ் கட்சிகள் தம்முடன், ஒன்றிணைந்தால், தமது கொள்கைகளுக்கும், தமிழ் கட்சிகளின் கொள்கைளுக்கும் அமைவாக ஏற்று நடக்க தாம் தயார் என்றும் அவர் கூறினார்.

இம்மாதம் இறுதி வாரத்தில் பொதுச்சபைக் கூட்டத்தினை கூட்டி பொதுச்சபை உறுப்பினர்களின் ஆலோசனையுடன், தேர்தல் ஆணையாளரிடம் கட்சியைப் பதிவு செய்து விட்டு, எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்களில் போட்டியிட தயாராகவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .