2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தக்காளி கால்நடைகளின் உணவு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 16 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ்.மாவட்டத்தின் சந்தைகளில் தக்காளிகளின் விலைகள் குறைவடைந்திருப்பதினாலும், சந்தையில் அதிகளவு நிரம்பல் காணப்படுவதினாலும் சுன்னாகம் பகுதியில் தக்காளி உற்பத்தி செய்த விவசாயிகள் அவற்றினை தங்கள் கால்நடைகளுக்கு உணவாகக்கியுள்ளனர்.

சந்தையில் தக்காளி 25 ரூபா தொடக்கம் 35 வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றது. இருந்தும் யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்யப்படும் மற்றும் தம்புள்ளயிருந்து கொண்டுவரப்படும் தக்காளிகள் சந்தையில் அதிகளவில் இருப்பதால் அதிகளவான நிரம்பல் ஏற்பட்டுள்ளது.இதனால் உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்திகளை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன், யாழ்.மாவட்டத்தில் இருக்கும் ஜாம் மற்றும் கோடியல் ஜீஸ் என்பவற்றினை உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் சரிவர இயங்காமையினால் அங்கும் தங்கள் உற்பத்திகளை விவசாயிகளினால் விற்க முடியவில்லை.

இந்நிலையில் வரட்சியினால் உணவின்றித் தவிக்கும் தமது கால்நடைகளுக்கு உற்பத்தி செய்யும் தக்காளிகளை உணவாக்கிவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .