2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

'பச்சை நகரம்' உருவாக்குதல் செயலமர்வு

Super User   / 2014 ஏப்ரல் 22 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் உலக புவி தினத்தினை முன்னிட்டு 'பச்சை நகரம்' (கிறீன் சிட்டி) என்ற தொனிப்பொருளிலான விழிப்புணர்வுச் செயலமர்வு நல்லூர் பிரதேச செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்றது.

நல்லூர் பிரதேச செயலாளர் பா.செந்தில் நந்தனன் தலைமையில் நடைபெற்ற இந்த செயலமர்வில் 'நகரமீட்சி திறனை' வளர்ப்பதற்கான உபாயத்தினை உருவாக்குதல் தொடர்பாகன விழிப்புணர்வு கருத்துக்களை யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய பணிப்பாளர் ரவி சங்கரப்பிள்ளை வழங்கினார்.

நல்லூர் பிரதேச செயலகத்தின் கீழுள்ள 40 கிராம அலுவலர் பிரிவுகளிற்கும் புவியியல் திட்ட வரைபடத்தினை யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய பணிப்பாளர் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் நல்லூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராமஅலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .