2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

றெக்ஷிசன் கொலை; சந்தேகநபரின் பிணை மனு ஒத்திவைப்பு

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 17 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் டானியல் றெக்ஷிசனின் கொலை தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மூன்றாவது சந்தேகநபரான லண்டன் யசிந்திரனின் பிணை மனுவை எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதிக்கு ஒத்திவைக்க யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர், இன்று வியாழக்கிழமை (16) உத்தரவிட்டார்.

தனக்கு பிணை வழங்குமாறு லண்டன் யசீந்திரன், தனது சட்டத்தரணி ஊடாக யாழ்.மேல் நீதிமன்றில் பிணை விண்ணப்பம் செய்திருந்தார். மேற்படி பிணை மனு மேல் நீதிமன்றத்தால் இன்று வியாழக்கிழமை (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, நீதிபதி பிணை மனுவை ஒத்திவைத்தார்.

நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் டானியல் றெக்ஷிசன் கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த கொலை தொடர்பில் வடமாகாண சபை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரனை 2013ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் திகதி கொழும்பில் வைத்து பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்திருந்தனர்.
 
அத்துடன் றெக்ஷிசனின் மனைவி அனித்தா மற்றும் யசிந்திரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இவர்களில், கமலேந்திரன் மற்றும் அனிடா ஆகியோருக்கு ஓகஸ்ட் மாதம் 29ஆம் திகதி யாழ்.மேல் நீதிமன்றம் பிணை வழங்கியது.

இருந்தும், யசிந்திரன் பிணை மனு விண்ணப்பம் செய்திருக்காத நிலையில் அவர் தொடர்ந்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையிலேயே, யசிந்திரன், தனது சட்டத்தரணி ஒருவர் மூலம் பிணை விண்ணப்பம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .