2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஐ.நா விசாரணையில் கூட்டமைப்பு முனைப்புடன் செயற்படும்: மாவை

Menaka Mookandi   / 2015 பெப்ரவரி 01 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

ஐ.நா. சர்வதேச விசாரணை அறிக்கையை வெளியிடும் நடவடிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முனைப்புடன் செயற்படும் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

சுமந்திரனின் பாராட்டுவிழா நாவலர் கலாச்சார மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்ற போதே, அதில் கலந்துகொண்ட மாவை, நிகழ்வு முடிந்த பின்னர் சர்வதேச விசாரணை தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

நாங்கள் கொடுத்த அழுத்தங்கள் காரணமாக சர்வதேச விசாரணை தற்போது நடக்கின்றது. போர்க்குற்றங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வைக்கப்பட்ட பிரேரணை தொடர்ந்து விசாரிக்கப்பட்டு, அதில் தெரிவிக்கப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படவேண்டும்.

இதனை திட்டவட்டமாக கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதற்காக தொடர்ந்தும் நாங்கள் செயற்படுவோம். கூட்டமைப்பு இதற்காக முன்னின்று செயற்படும் ஒருபோதும்.

சர்வதேச விசாரணையிலிருந்து பின்னிற்காது. இது தொடர்பான மாற்றுக்கருத்துக்களும் இல்லை. இதிலிருந்து விலகிப்போவதும் இல்லையெனக் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .