2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

நியமனங்களில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவது மனித உரிமை மீறல்

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 01 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

நியமனங்கள் வழங்குவதில் தமிழ் இளைஞர், யுவதிகள் புறக்கணிக்கப்படுவது மனித உரிமை மீறலாகும். இதனை நிவர்த்தி செய்யும் பட்சத்தில், நியமனங்கள் பெறுபவர்கள் தங்கள் திறமைகளை வெளிக்காட்டவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகளுக்கு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து அதன் ஊடாக அவர்களுக்கு நியமனங்கள் பெற்றுக்கொடுத்தமைக்கு சுமந்திரனை பாராட்டி நாவலர் கலாச்சார மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

இந்த வழக்கு தொடர்பாக எங்கள் பக்கமுள்ள சரியான ஆதாரங்களை முன்வைத்து நியமனங்களை பெற்றுக்கொண்டோம். நியமனங்கள் பெற்ற சகலரும் தமது செயற்றிறன்களைக் காட்டி மற்றவர்களுக்கு ஒரு சவாலாக விளங்கவேண்டும்.

குறித்த வழக்கானது 278 பேர் கொண்ட வழக்காக பதிவு செய்து முன்னெடுக்கப்பட்டது. நியமனங்கள் வழங்குவதற்கு முழுமூச்சாக நடைபெறுவதற்கு காரணமானவர்கள் இந்தப் பட்டதாரிகள்.

இலங்கையின் மற்றைய இடங்களில் நியமனங்கள் வழங்கப்பட்டமையும், தாங்கள் புறக்கணிக்கப்பட்டமையும் அவர்கள் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியதில் இந்த வழக்கு வெற்றிபெற்றது. இந்த வழக்குத் தொடர்ந்த பின்னர் மற்றைய மாகாணங்களில் வழங்கப்பட்ட நியமனங்கள் தவறான நியமனங்கள் எனவும் அதனை அகற்றப்போவதாக அரசாங்கம் கூறியிருந்தது. இதுவே இந்த வழக்கின் வெற்றிக்கு வழிவகுத்தது.

தமிழர்கள் நியமனங்களில் புறக்கணிக்கப்படுவது வடக்கில் மட்டுமல்ல கிழக்கிலும் இது இடம்பெற்றுள்ளது. அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் நியமனம், முகாமைத்துவ உதவியாளர் நியமனங்கள் ஆகியவற்றில் தமிழர்கள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டனர். அதற்கு எதிராகவும் மனுத்தாக்கல் செய்திருந்தோம். அதற்கு கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் 3 வருடங்களுக்கு தமிழர்களுக்கு நியமனங்கள் இல்லையெனக்கூறியிருந்தார்.  

தமிழ், இளைஞர் யுவதிகள் இவ்வாறு புறக்கணிக்கப்படுவது எந்தவகையில் நியாயமானது என்றும் இன்னுமொரு ஆயுதப்போராட்டத்துக்கு வழிவகுக்கின்றீர்களா என சட்டவல்லுநர்கள் ஆளுநரிடம் கேட்டிருந்தனர்.

இனிவருங்காலங்களில் நியமனங்கள் ஒழுங்குமுறையில் நடைபெறவேண்டும். உரிமை மீறல்கள் இடம்பெறக்கூடாது.
காணிகள் சுவீகரிப்புக்கு எதிராக 2176 வழக்குகள் நீதிமன்றத்தில் தொடுத்துள்ளோம்.

மற்றைய அமைச்சுக்களின் அதிகாரங்களை பிடுங்கிக்கொள்ளும் பொருட்டு 2010ஆம் ஆண்டு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு உருவாக்கப்பட்;டது. அது மஹிந்த ராஜபக்ஷவின் தம்பிக்காக உருவாக்கப்பட்டது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சு இனி இல்லாமல் போனால் நல்லது. இருந்தாலும் ஏற்றுக்கொள்ளுவோம் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .