2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கால்நடை உற்பத்தி, அபிவிருத்திக்கு ரூ. 42 மில்லியன்

George   / 2015 பெப்ரவரி 02 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா


வடமாகாணத்திலுள்ள கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு 42 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பணிப்பாளர் எஸ்.வசீகரன், திங்கட்கிழமை (02) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், வாழ்வாதாரம், இனவிருத்தி, திணைக்கள கட்டமைப்பு என மூன்று பிரிவுகளாக செலவுப் பட்டியல் நிதி ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ளோம். அனுமதி கிடைக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளோம்.

மத்திய கால்நடை அமைச்சால் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் கால்நடை வைத்தியர்களுக்கு விடுதிகளும் அமைக்கவுள்ளோம்.

இந்திய அரசின் நிதியுதவியில் நல்லின மாடுகள், விவசாய உபகரணங்கள், பால் பதனிடும் இயந்திரங்கள் மற்றும் பயிற்சிகள் வழங்குமாறு யாழ். இந்தியத் துணைத்தூதர் ஏ.நடராஜனிடம் கோரிக்கை விடுத்திருந்தோம். அவர் சாதகமாக பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார் என வசீகரன் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .