2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

முதலைக்குழி நன்னீர் விநியோகத் திட்டம் ஆரம்பிப்பு

George   / 2015 பெப்ரவரி 04 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண முதலமைச்சரின் குறித்தொதுக்கப்பட்ட 3 மில்லியன் ரூபாய் நிதியில் அமைக்கப்பட்ட கரணவாய் தெற்கு முதலைக்குழி கிராமத்துக்கான நன்னீர் விநியோகத்திட்டத்தை வடமாகாண நீர்வழங்கல் மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், செவ்வாய்க்கிழமை(03) ஆரம்பித்து வைத்தார்.

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கரணவாய் தெற்கு முதலைக்குழியில் கிணற்று நீர் உவர் தன்மையுள்ளதாக இருப்பதால், இங்கு வாழும் மக்கள் குடிநீரை பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இது தொடர்பாக அமைச்சர் பொ.ஐங்கரநேசனின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து முதலைக்குழிக்கான நீர்விநியோகத்திட்டம் இப்போது ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

முதலைக்குழியில் வாழும் 350 குடும்பங்கள் பயன்பெறக்கூடியதாக 1600 மீற்றர் தூரத்துக்கு நீரை விநியோகிக்கும் வகையில் 18 நீர்க்குழாய்களை கொண்டதாக இத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் பொ.வியாகேசு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடமாகாணசபை உறுப்பினர்களான ச.சுகிர்தன், வே.சிவயோகன், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் இ.வரதீஸ்வரன், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை செயலாளர் எஸ்.சிவசிறீ ஆகியோரும் கலந்துகொண்டனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .