2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

"மாணவர்களின் ஆற்றலை வெளிப்படுத்த பரீட்சை பெறுபேறுகள் தவறுகின்றன"

Menaka Mookandi   / 2015 பெப்ரவரி 08 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

சமகால கல்வி வாய்ப்பில் தனியே பரீட்சை பெறுபேறுகள் அடைவுடன் மட்டும் முன்னிலைப்படுத்தப்படும் போது, பெரும்பாலான மாணவர்களின் ஆற்றல் வெளிப்படுத்தப்படாமல் போய்விடுகின்றது என மானிப்பாய் இந்து கல்லாரி அதிபர் எஸ்.சிவநேஸ்வரன் தெரிவித்தார்.

மானிப்பாய் இந்து கல்லூரியில் 2015ஆம் ஆண்டுக்குரிய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை (07) நடைபெற்ற போது, அதில் தலைமை வகித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், 'பாடசாலைக்காலத்தில் கல்வியுடன் விளையாட்டு துறையிலும் சிறந்து விளங்கும் மாணவர்களே எதிர்காலத்தில் சமூகத்துக்கு பொருத்தப்பாடுடைய மாணவர்களாக உருவாகுகின்றார்கள். பாடசாலை கல்வியில் இணைப்பாடவிதான செயற்பாடுகள் முக்கியமானவையாக விளங்குகின்றன' என்றார்.

கல்வி என்னும் சாலையில் மாணவர்கள் அறிவு ஆளுமையுள்ளவர்களாக சமூகத்துக்கு  பொருத்தப்பாடுடையவர்களாக பல்வேறு விடயங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். தனியே கல்வியுடன் மட்டும் நின்றுவிடாது, இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் ஈடுபாடு காட்ட வேண்டும். சமூகத்தின் சவாலை எதிர்கொள்வதற்கும், சமூகத்தை நடத்த பழகுவதற்கான களமாகவும் கல்வியை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.  

பாடசாலை பாடவிதானங்கள், புத்தகக்கல்விக்கு மட்டும் உரியதல்ல. சமகல்வி வாய்ப்புடன் வளர்த்தெடுக்கப்படவேண்டும். தற்கால யாழ்ப்பாண கல்வி முறைமை பாடசாலையில் இருந்து மாணவர்களை அந்நியப்படுத்துவதாக அமைந்து காணப்படுகின்றது.

எமது மானிப்பாய் இந்துக் கல்லூரியைப் பொறுத்தவரையில் சமகல்வி வாய்ப்பு பொருத்தமான வகையில் மாணவர்களுக்கு  வழங்கப்படுகின்றது. மாணவர்கள் கல்வியுடன் இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் தங்கள் திறன்களை வெளிப்படுத்தி வருகின்றார்கள் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X