2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இடம்பெயர்ந்தோரை மீள்குடியேற்ற நடவடிக்கை: விஜயகலா

Menaka Mookandi   / 2015 பெப்ரவரி 12 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

வலிகாமம் வடக்கு பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீண்டும் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அந்த மக்களின் பிரச்சினைகள் சுமூகமான முறையில் தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மகளிர் விவகார பிரதி அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

மல்லாகம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி பாடசாலை அதிபர் எஸ்.திருச்செல்வம் தலைமையில் புதன்கிழமை (11) பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. அந்நிகழ்வின் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'புதிய அரசாங்கம் அமைவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காரணமாக இருந்தனர். நான் அரசில் பிரதி அமைச்சராக இருந்தாலும் கூட கூட்டமைப்பினரே, அரசில் அதிக செல்வாக்கை கொண்டவர்களாக காணப்படுகின்றார்கள். இவர்கள் அரசின் அமைச்சுக்களில் அங்கம் வகிக்காவிட்டாலும், அரசின் செயற்பாட்டில் முக்கிய பங்கை வகிக்கின்றார்கள்.

கூட்டமைப்பு வழங்கிய ஒத்துழைப்பின் மூலம் தான் இன்று அரசாங்கம் அமைந்துள்ளது. கூட்டமைப்புடன் இணைந்து எமது மக்களுக்கான பணிகளை செய்வதற்கு தயாராகவிருக்கின்றேன்.

இந்தப் பாடசாலையில் கட்டட வசதிகள் போதாது இருப்பதாகவும் பாடசாலை மாணவர்கள் பிரதான வீதியை கடந்து இரண்டு பக்கமும் வகுப்பறைகளுக்கு செல்லவேண்டிய நிலமை காணப்படுவதாகவும் வலிகாமம் வடக்கு பிரதேச சபை தலைவர் சோ.சுகிர்தன் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு முக்கியம் என்றவகையில் இந்த பாடசாலை மாணவர்கள் பிரதான வீதியை கடக்கும் நிலைமையை போக்கும் வகையில் மேம்பாலம் அமைப்பதை அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தில் இணைத்து கொள்வதற்காக அரசுடன் பேசி நடவடிக்கை எடுக்கின்றேன்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .