2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தமிழர்களின் துயர் தீர்க்கவே த.வி.கூ கொழும்பில் போட்டி

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 03 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவும், தோட்ட மக்களின் அடிப்படைத் தேவை உள்ளிட்ட முக்கிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவுமே கொழும்பில் போட்டியிடுவதாக தமிழர் விடுதலைக் கூட்டணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அக்கட்சியின் நிர்வாகச் செயலாளர் இரா.சங்கையா திங்கட்கிழமை (03) அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'தமிழர் விடுதலைக் கூட்டணி ஏன் கொழும்பில் போட்டியிடுகின்றது என்று பலரும் பலவாறு விமர்சிக்கின்றனர். கடந்த காலங்களில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக தேசியக் கட்சிகளில் இணைந்தும், சில தேர்தல்களில் தனித்தும் தமிழ் அரசியல் பிரமுகர்கள் போட்டியிட்டனர். தமிழ் பிரதிநிதிகள் நாடாளுமன்றமும் சென்றார்கள். ஆனால் எமது மக்களின் பிரச்சினைகள் தீர்ந்ததா? தீர்த்து வைக்கப்பட்டதா? எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் உள்ள தோட்டங்களில் வாழும் மக்களின் அடிப்படை வசதிகளான சீரான நீர் விநியோகம், சுகாதாரம், வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி போன்றவற்றில் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்த்துவைக்கப்படவில்லை.

இவ்வாறான மிகவும் இலகுவான பிரச்சினைகளைக்கூட ஏற்கனவே நாடாளுமன்றம் சென்றவர்களால் தீர்த்துவைக்க முடியவில்லை. எங்களால் இவ்வாறான பிரச்சினைகளை தீர்த்துவைக்க முடியும் என்பதால்தான் தமிழர் விடுதலைக் கூட்டணி தனித்துவமான அடையாளத்துடன் வீ.ஆனந்தசங்கரி தலைமையில் களமிறங்கியுள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரமான, நிலையான தீர்வாக இந்திய அரசியலமைப்பு முறையிலான அதிகார பகிர்வே பொறுத்தமானது என்பதே தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிலைப்பாடாகும். அதாவது தமிழகத்தில் இருக்கின்ற அதிகாரங்களை ஒத்த ஒரு அரசியல் தீர்வைத்தான் அன்று தொட்டு இன்றுவரை வலியுறுத்தி வருகின்றோம்.

அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தர தீர்வினை பெறுவதற்கான வாக்குகளாக இருக்க வேண்டும். நிச்சயமாக நாங்கள் எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்போம்' என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X