2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

27 வருடங்களின் பின் செந்த ஊர் திரும்பும் கருநாட்டுக்கேணி கிராம மக்கள்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 29 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் பிரதேசத்திலுள்ள கருநாட்டுக்கேணி கிராம மக்கள் 27 வருடங்களின் பின்னர் அவர்களின் சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

மெனிக்பாம் முகாமிலுள்ள 50 குடும்பங்களை அங்கு மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.பத்திநாதன் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

மீள்குடியேறவுள்ள இக்குடும்பங்கள் நாளை புதன்கிழமை மெனிக்பாம் முகாமிலிருந்து கருநாட்டுக்கேணிக்கு அதிகாரிகளினால் அழைத்துச் செல்லப்படுவார்களெனவும் அவர் கூறினார்.

இதேவேளை, உறவினர் மற்றும் நண்பர்களது வீடுகளில் வசித்து வரும் கருநாட்டுக்கேணி கிராமத்தைச் சேர்ந்த குடும்பங்களையும் அடுத்தடுத்து மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி உள்ளிட்ட 6 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த 1984ஆம் ஆண்டு அவசர அவசரமாக  வெளியேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .