2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

30 பவுண் நகை மோசடி; பெண் தலைமறைவு

Suganthini Ratnam   / 2013 ஜூலை 22 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

30 பவுண் நகையினை மோசடி செய்துவிட்டு பெண்ணொருவர் தலைமறைவாகிவிட்டதாக பாதிக்கப்பட்ட பெண் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

யாழ். குருநகர் பகுதியில் வாழும் பெண்ணொருவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் அதே இடத்தில் உள்ள பெண் ஒருவரிடம் சொந்த தேவைக்காக 30 இற்கும் மேற்பட்ட பவுண் நகைகளை பெற்று மீளத் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.

நகைகளை கொடுத்த பெண், இது தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

அந்த முறைப்பாட்டின் பிரகாரம் நகையினை பெற்றுக் கொண்ட பெண்ணை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து யாழ். பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.

கடந்த 15ஆம் திகதி சில நகைகளை கையளிப்பதாகவும் ஏனைய  நகைகளை தவணை முறையில் செலுத்துவதாக விசாரணையின் போது அந்த பெண் கூறியுள்ளார்.

எனினும், நிர்ணயிக்கப்பட்ட திகதியில், நகைகளை செலுத்தாது குறித்த பெண் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

இதனால், பாதிக்கப்பட்ட பெண் யாழ். பொலிஸ் நிலையத்திற்கு மீண்டும் நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்று  முறைப்பாடு செய்துள்ளார்.

அதனையடுத்து, நகைகளை மோசடி செய்த பெண்ணின் கணவனை யாழ். பொலிஸார் நேற்றைய தினமே கைதுசெய்து விசாரணை  மேற்கொண்டபோது, மனைவி அவுஸ்திரேலியாவிற்கு செல்ல தலைமறைவாகிவிட்டதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .