2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 30 மில்லியன் ரூபாய் செலவில் சிறுவர் விடுதி

Super User   / 2010 செப்டெம்பர் 14 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கண்ணன்)

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 30 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட 2 மாடிகளைக் கொண்ட குழந்தைகளின் விடுதி, வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானிய சர்வதேச அபிவிருத்திக்கும் நிவாரணத்துக்குமான நிறுவனத்தால் நிர்மாணிக்கப்பட்ட இந்தக் கட்டடத்தை நிறுவன முகாமைத்துவப் பணிப்பாளர் நோபி கிகோ இக்காவா, வைத்தியசாலை நிர்வாகத்திடம் நேற்றுக் கையளித்தார்.

அத்துடன் இங்கு ஒரு மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவை இந்நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் ஆகியோர் நாடா வெட்டித் திறந்து வைத்தனர்.

விடுதிக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் ஆர். தயாளனிடம் கையளிக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .