2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

வடமராட்சி கிழக்கில் 6 கிராமங்களில் மீள்குடியேற்றம்

Super User   / 2010 செப்டெம்பர் 01 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கர்ணன்)

வடமராட்சி கிழக்கில் மீள்குடியேற்றத்துக்கு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து 2 ஆயிரத்தி 455 குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மெற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:

எதிர்வரும் 9ஆம், 10ஆம் திகதிகளில் குறித்த பிரதேசங்களில் உள்ள 6 கிராமசேவகர் பிரிவுகளில் இந்த மீள்குடியேற்றம் இடம்பெறவள்ளது. 2 ஆயிரத்தி 455 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்தி 531 பேர் இவ்வாறு மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளனர்.

செம்பியன்பற்று வடக்கு, செம்பியன்பற்று தெற்கு, மருதங்கேணி, வத்திராயன், உடுத்துறை, ஆழியவளை ஆகிய கிராமங்களில் இவர்கள் மீள்குடியமர்த்தப்படவுள்ளனர்.

இதேவேளை - இவர்களில் ஆயிரத்தி 385 குடும்பங்கள் தமது வாழ்வாதாரமாக மீன்பிடித்தொழிலைக் கொண்டுள்ளமையால் அதற்கான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். அத்துடன் அடிப்படை வசதிகளை யாழ். செயலகம் ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளது. – என்று அவர் மேலும் தெரிவித்தார்.

வடமராட்சி கிழக்குப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் தற்போது இராமில் நலன்புரிநிலையம், மணற்காடு திறந்தவெளி முகாம் மற்றும் உறவினர், நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .