2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

யாழ். குடா நாட்டில் 60,000 குடும்பங்களுக்கு வீடுகள் இல்லை: மாவட்ட செயலாளர்

Super User   / 2011 ஒக்டோபர் 01 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். குடா நாட்டில் 60,000 குடும்பங்களுக்கு இன்னமும் நிரந்தர வீடுகள் இல்லாமல் மர நிழல்களிலும் உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளில் வாழ்வதாக யாழ். மாவட்ட செயலாளர் இமல்டா சுகுமார் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் யாழின் வீடமைப்பு திட்டங்கள் எனும் விஷேட மாநாடு இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

யாழ். மக்கள் வீடுகள் இல்லாமல் மிக கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர். உயர் பாதுகாப்பு பகுதிகளில் 25,000 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. உலக வங்கியின் நிதியின் மூலம் 13,350 வீடுகள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

எனினும் யாழ். மக்களுக்கு வீட்ட திட்டங்கள் போதுமானதாக இல்லை. இந்திய அரசின் வீட்டு திட்டத்தில் பல வீடுகள் மக்களை சென்றடைந்தாலும் இந்திய அரசு யாழ். மக்களுக்கு இன்னும் பல ஆயிரம் வீடுகளை கட்டிக் கொடுக்க முன் வர வேண்டும்.

யாழில் வருமானம் குறைந்தவர்கள் அதிகமானேர் இருக்கின்றனர். இவர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் முன்னுரிமை அடிப்படையில் வீடுகளை அமைத்து கொடுத்து; வாழ்வியலை முன்னேற்று வேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X