2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

புனர்வாழ்வளிக்கப்பட்ட 78 முன்னாள் போராளிகள் விடுதலை

Super User   / 2011 ஜனவரி 15 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்த 78 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டு இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் வைத்து விடுதலை செய்யப்பட்டனர்.

தழிழர்களின் தைத்திருநாளாம் தைப் பொங்கல் விழா இன்று யாழ். மத்திய கல்லூரியில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதன் போதே புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளும் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிகழ்வில் மனித வள சிரேஷ்ட அமைச்சர் டியூ குனசேகர, புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரஸ்ரீ கஜதீரா, பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார், யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராசா உட்பட அமைச்சின் செயலாளர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது கடந்த கால வன்செயலகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடும் வழங்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .