2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Editorial   / 2017 டிசெம்பர் 04 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த், டி.விஜிதா, எஸ்.நிதர்ஷன்

242 மில்லியன் ரூபாய் செலவில், யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள திறந்த நீதிமன்றங்களின் கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இன்று (04) காலை 9.45 மணிக்கு நடைபெற்றது. 

இதன்போது, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அடிக்கல்லை நாட்டி வைத்தார். 

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், மேல் நீதிமன்றம் மற்றும் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் ஆகியவற்றின் திறந்த நீதிமன்றங்களுக்காகவே இந்தக் கட்டடத் தொகுதி அமைக்கப்படுகிறது. 

தற்போதைய நீதிமன்றக் கட்டடத் தொகுதியில், திறந்த நீதிமன்றங்களுக்கான போதிய இடவசதி காணப்படுவதில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து, 2017ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் கீழ், 242 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் இந்த ஆண்டு 100 மில்லியன் ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, கட்டட நிர்மாணத்துக்கான அடிக்கல், நேற்று நாட்டப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .