2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஆயுத களஞ்சியம் அகற்றப்பட்டது

Editorial   / 2018 ஏப்ரல் 17 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்

வலி.வடக்கு மயிலிட்டி பகுதியில் இராணுவத்தினரின் பாரிய ஆயுத களஞ்சியம் அமைந்திருந்த பகுதி என சந்தேகிக்கப்படும் பகுதியில் இருந்த கட்டடங்கள் இராணுவத்தினரால் இடித்தழிக்கப்பட்டு உள்ளது.

வலி.வடக்கில் கடந்த 28 வருட காலமாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த 683 ஏக்கர் நிலப்பரப்பு கடந்த 13 ஆம் திகதி அதன் உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்பட்டது.

இந்நிலையில் மயிலிட்டி வடக்கில் கட்டடம் ஒன்றினை சுற்றி பாரிய மண் அணைகள் கட்டப்பட்டு காணப்பட்டன.

தற்போது, குறித்த கட்டடத்தை இராணுவத்தினர் இடித்தழித்து விட்டு கட்டடத்தின் இரும்பு கூரைகளை தமது வாகனங்களில் ஏற்றி சென்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டடம் பலத்த பாதுகாப்பான மண் அணைகளுக்கு நடுவில் காணப்பட்டமையால், அக் கட்டடத்தினுள் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டு அந்த கட்டடம் ஆயுத களஞ்சியமாக பாவிக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டது.

அதேவேளை குறித்த கட்டடத்தை அண்டிய பகுதிகளில் வெடிபொருட்களின் வெற்று கோதுகள் பெருமளவில் பைகளில் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது.

மயிலிட்டி வடக்கில் பாரிய ஆயுத கிடங்குகள் மற்றும் ஆயுத களஞ்சியங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், அதனால் அப்பகுதிகளை மீள கையளிக்கக் கூடாது என தேசிய போர் வீரர்கள் முன்னணி அமைப்பு கடந்த 2016ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனாவிடம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .