2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கனடா உயர்ஸ்தானிகர் - யாழ்.மாநகர மேயர் சந்திப்பு

Editorial   / 2018 டிசெம்பர் 06 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.விஜிதா

எமது உரிமைகளை வென்றெடுக்க எந்த அரசு துணைபுரிகின்றதோ அந்த அரசுடன் பயணித்து எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நோக்கம் என யாழ்.மாநரக முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்தார்.

யாழுக்கு விஜயம் மேற்கொண்ட கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மக்னே மற்றும் யாழ்.மாநகர மேயர் இம்மானுவேல் ஆனோல்ட் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (06) இடம்பெற்றது.

சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழுக்கு வருகை தந்த கனடா உயர்ஸ்தானிகர் யாழ்.மாவட்ட மக்களின் வறுமை நிலை எவ்வாறு இருக்கின்றதென கேள்வி எழுப்பினார்.

வடமாகாண சபை இருந்த போது, மிக அக்கறையுடன் வறுமை நிலை தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுத்திருக்க வேண்டும். அதில் தவறிழைத்துவிட்டோம். மக்களின் வறுமை நிலையைப் போக்குவதற்கு பொருளாதார ரீதியில் வளர்த்தெடுப்பதுக்கான அணுகுமுறைகளையும் கண்டு பிடித்துக்கொடுக்கும் பட்சத்தில் தான் வறுமை நிலையை ஒழிக்க முடியும்.

தமிழ்நாட்டுக்கும், பலாலிக்குமான விமான சேவை மற்றும் கடல்வழிப் பயணங்கள் முன்னெடுக்கப்படுமாக இருந்தால், இந்த வசதிகளைப் பயன்படுத்தி மக்கள் தமது பொருளாதாரத்தை உயர்த்த முடியும். அதேநேரம், சிறுகைத்தொழில் முயற்சிகளையும் ஆரம்பித்துக்கொடுப்பதன் மூலம், வறுமை நிலையைப் போக்க முடியும்.

மக்களின் வறுமை நிலையைப் போக்குவதுக்கான வழிமுறைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பினும், தற்போதை அரசியல் சூழ்நிலை காரணமாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினேன்.

50 வருட அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுக்க கூடிய பொறியியலாளர் ஒருவரை தருவதாக கனடா உயர்ஸ்தானிகர் தெரிவித்திருந்தார்.

பாதாள சாக்கடை திட்டத்தை அறிமுகப்படுத்தும் திட்டம் தொடர்பாக கூறியிருந்தோம். எதிர்வரும் மார்ச் மாதத்தில் மீண்டும் இங்கு வருகை தந்து, திட்டத்தை அமுல்ப்படுத்துவதாக அவர் தெரிவித்தார் என மேயர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .