2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கால எல்லை விவகாரம்: தேர்தல்கள் ஆணையாளருக்கு கடிதம்

Editorial   / 2018 ஜூன் 12 , பி.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

வடக்கு மாகாண சபையின் கால எல்லை தொடர்பில் பல்வேறு விதமான கருத்துகள் வெளியாகும் நிலையில், அவை குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் தேர்தல்கள் ஆணையாளருக்கும் மாகாண சபை கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக, அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

மாகாண சபையின் அமர்வு, கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் இன்று (12) இடம்பெற்றது. இதன்போது, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர்,

“மாகாண சபையின் ஐந்தாண்டு காலம் முடிவடைவதற்கு இன்னும் சில மாதங்கள் இருக்கின்ற நிலையில், மாகாண சபையின் முடிவடையும் கால எல்லைகள் குறித்து ஊடகங்களில் பல்வேறுபட்ட கதைகள் வெளியாகி வருகின்றன.

“இந்நிலையில் முதலாவது வடக்கு மாகாண சபை கடந்த 25.10.2013ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்தச் சபையின் ஐந்தாண்டுகள் காலம் எதிர்வரும் ஒப்டோபர் 25ஆம் திகதியுடன் முடிவடைகிறதென்பதை வெளிப்படுத்தியே இந்தக் கடிதத்தை அனுப்பி வைத்திருக்கின்றேன்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X