2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

குற்றமிழைத்த 51 பேருக்கு சமூதாய சீர்திருத்த பணி

Gavitha   / 2015 ஓகஸ்ட் 26 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

பருத்தித்துறை நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைவாக இந்த வருடம் ஜனவரி மாதம் தொடக்கம் ஓகஸ்ட் மாதம் வரையிலும் 49 பேர் சமூதாயம்சார் சீர்திருத்தப் பணிகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பருத்தித்துறை நீதிமன்ற சமூதாயம்சார் சீர்திருத்த அதிகாரி சிவஞானம் இதயதீபன், புதன்கிழமை (26) தெரிவித்தார்.

பொது இடத்தில் மதுபானம் அருந்தியமை, அனுமதிப்பத்திரமின்றி மதுபானம் வீட்டில் வைத்து விற்பனை செய்தமை, காடுகளில் விறகு வெட்டியமை, கசிப்பு உற்பத்தி, விற்பனை ஆகிய குற்றச்சாட்டுக்களில், பருத்தித்துறை நீதிமன்ற நியாயத்திக்கத்துக்குட்பட்ட 3 பொலிஸ் நிலையப் பிரிவுகளிலும் கைது செய்யப்பட்ட 49 பேருமே இவ்வாறு சீர்திருத்தப் பணிக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 2 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

தண்டனை சட்டக் கோவையை மீறி ஏதோவொரு குற்றத்துக்காக பொலிஸாரால் குற்றத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்கு தொடரப்படுகின்றது. நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படும் போது, குற்றவாளிகளுக்கு அபராதம் அல்லது சிறைத் தண்டனை விதிக்கப்படுகின்றது.

அபராதம் விதிக்கப்பட்ட தண்டனையாளர்களில் சிலர் வறுமை காரணமாக தண்டப் பணத்தை செலுத்துவதில்லை. அவ்வாறான தண்டனையாளர்கள் சமூதாயம்சார் சீர்திருத்த பணிக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

சமுதாயச் சீர்திருத்த பணியின் போது மாதாந்தம் ஆன்மீக வழிகாட்டல், குழு ரீதியான உளவளதுணை, மதுப்பாவனைக்கு அடிமையானவர்களுக்கு மதுவெறுப்பு சிகிச்சை என்பன வழங்கப்பட்டு வருகின்றன. இவர்களுக்கு தொழில் வழிகாட்டலும் எமது திணைக்களத்தால் மேற்கொள்ளப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X