2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘சமாதானத்தை வலியுறுத்தி யாழில் இருந்து கொழும்புக்கு நடைபயணம்’

Editorial   / 2019 டிசெம்பர் 10 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில் இருந்து ஜனாதிபதி செயலகம் வரை, நாளை (11) நடைபயணமொன்றை  ஆரம்பிக்கவுள்ளதாக, போரால் பாதிக்கப்பட்ட அமைப்பின் தலைவர் வி.சகாதேவன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில், இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் பொதெ, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், இந்த நடைபயணம், கடந்த காலத்தை நினைவூட்டும் விதமாகவும் தற்போதைய அரசாங்கத்திடம் சமாதான செய்தியை அறிவிப்பதற்காகவும் ஒரு உயிருள்ள அரச மரக்கன்றுடன் ஆரம்பிப்பதாகவும் தெரிவித்தார்.

இதனை, தமிழ் மக்களின் சார்பில் புதிய ஜனாதிபதிக்கு கையளிப்தே தனது நோக்கமாகுமெனவும், அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X