2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘நம்பிக்கையோடு முன்னோக்கி நகர்வோம்’

Editorial   / 2020 ஓகஸ்ட் 10 , பி.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

“நாட்டின் சிறுபான்மை மக்களது உரிமைகளுக்காகவும் அவர்களுக்கான நீதிக்காகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புத் தொடர்ந்தும் குரல்கொடுக்கும்” என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம் ஆதரவாளர் வட்டம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இலங்கை மக்கள் தங்களது ஜனநாயகக் கடமையை அமைதியாக நிறைவேற்றியிருக்கின்றார்கள். இந்த சந்தர்ப்பத்திலே, வடக்கு மாகாணத்திலே எங்களுடைய அழைப்பையேற்று, தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்து, அதனை வெற்றிபெறச் செய்த அனைத்து வடக்கு மாகாண முஸ்லிம் மக்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

“வடக்குக் கிழக்கு உள்ளடங்கலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 10 ஆசனங்களை பெற்றிருக்கின்றது. சிறுபான்மைக் கட்சிகள் சார்பிலே, தமிழ்பேசும் மக்கள் சார்பிலே, நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரிய கட்சியாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பே திகழப்போகின்றது என்பது திண்ணம்.

“தமிழ்த் தேசியப் போராட்டத்தை அறவழியில் முன்னகர்த்துதல், பிரிபடாத ஒரு நாட்டுக்குள்ளேயே சிறுபான்மை மக்களுக்கான அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்தல், பொருளாதார அபிவிருத்திகளை ஏற்படுத்துதல் போன்ற விடயங்களில் மக்கள் நம்பிக்கையோடு அணிதிரளும் ஒரு சூழ்நிலை உருவாக்கப்படுதல் அவசியமாகும்.

“சமூகங்களுக்கிடையிலான ஒரு நீண்ட அரசியல் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்திலே நம்பிக்கையோடு முன்னோக்கி நகர்வோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .