2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நிலாவரை கிணறுக்கு அருகாமையில் அகழ்வு பணி

Niroshini   / 2021 ஜனவரி 21 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் - நிலாவரை கிணறுக்கு அருகாமையில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் அகழ்வுப் பணி முன்னெடுப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள், இன்று (21) முன்னெடுக்கப்பட்டன.

நேற்று காலை, நிலாவரைக் கிணறு பகுதிக்கு வருகை தந்த தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், மரம் ஒன்றின் கீழ் அகழ்வு நடவடிகையை முன்னெடுத்து, ஆய்வுப் பணிகளை ஆரம்பித்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், அதிகாரிகளிடம் கலந்துரையாடினார்.

இதன்போது, இங்கு புராதனக் கட்டடம் ஒன்று இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அது தொடர்பில் ஆய்வுகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோமென, அதிகாரிகள் கூறினர்.

அத்துடன், ஆய்வுப் பணிக்கான செலவு மதிப்பீட்டை தயாரிப்பதற்கான பணியே இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவித்த அதிகாரிகள், செலவீட்டுக்கு அனுமதி கிடைத்ததும் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படுமெனவும் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .