2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நெடுந்தீவு வைத்தியசாலைக்கு வைத்தியரைக் கோரி போராட்டம்

Editorial   / 2017 ஒக்டோபர் 10 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். ஜெகநாதன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

யாழ். நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு, நிரந்தர வைத்தியரை நியமிக்கக் கோரி  கவனயீர்ப்புப் போராட்டமொன்று, இன்று (10) முன்னெடுக்கப்பட்டிருந்தது.

யாழ். மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பிரதேசமாகவும் நீண்ட கடல் மார்க்கப் போக்குவரத்துச் சேவையைக் கொண்ட பகுதியொன்றாகவுமுள்ள நெடுந்தீவில், தற்போது 1,390 குடும்பங்களைச் சேர்ந்த 6,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், இப்பிரதேச வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர்கள் இல்லாத நிலையில், கடந்த நான்கு மாதங்களாக வைத்தியர்களற்ற நிலை காணப்பட்டது. எனினும், பொதுமக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, ஓய்வு பெற்றுச் சென்ற வைத்தியரொருவர் தற்காலிகமாக பணிக்கமர்த்தப்பட்டுள்ளார்.

குறித்த வைத்தியரின் உடல்நிலை மற்றும் அவரது வயது என்பவற்றைக் கருத்திற் கொண்டு, தொடர்ந்து சேவைகளை ஆற்ற முடியாத நிலை காணப்படுகின்றது.

நோயாளியொருவரை, நெடுந்தீவு வைத்தியசாலையிலிருந்து மாவிலித்துறைக்கு அம்புலன்ஸில் கொண்டு சென்று, அங்கிருந்து குறிகாட்டுவான் வரை சுமார் 45 நிமிடங்கள் வரை படகு மூலம் பயணம் செய்து குறிகாட்டுவானுக்கு கொண்டு சென்று அங்கிருந்து அம்புலன்ஸ் மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவேண்டியுள்ளது.

இவ்வாறு நெடுந்தீவிலிருந்து, யாழ். போதனா வைத்தியசாலைக்கு நோயாளியொருவரை கொண்டு செல்ல இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் செலவிடப்படுகின்றது.

இந்நிலையில், ஆளணிப் பற்றாக்குறை, மருந்துப் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்களின் தட்டுப்பாடு என்பவற்றை உடனயாக நிவர்த்தி செய்ய வேண்டும் எனக் கோரியும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .