2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘பகையின்றி சபைகளை நடத்துவோம்’

Editorial   / 2018 பெப்ரவரி 14 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்  

‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, இத் தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்கின்றோம்’ எனத் தெரிவித்துள்ள, டெலோ அமைப்பின் செயலாளர் நாயகமும் சட்டத்தரணியுமான என்.ஸ்ரீகாந்தா,

பங்காளிகளாக இருக்காவிட்டாலும் பகை இல்லாமல் சபைகளை நடத்தி மக்களுக்கான சேவையைச் செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். 

இதேவேளை, “வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஆட்சியமைக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழர் விடுதலை கூட்டணி ஆதரவு வழங்க வேண்டும். அது தொடர்பில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து சில சாதகமான கருத்துக்களும் வந்துள்ளன” எனவும் அவர் தெரிவித்தார்.

யாழிலுள்ள தனியார் விடுதியில் நேற்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில், “தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இத்தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்கின்றோம்.

“எதுவாக இருந்தாலும் தேர்தல் பிரசாரத்தின் போது நாங்கள் ஒருவருக்கு ஒருவர் குற்றச்சாட்டுக்களை அடுக்கினோம். ஆனால் தேர்தலின் பின்னர் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்வதுக்கு ஒன்றுபட வேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .