2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘புத்தாண்டிலும் நடுவீதியில் உள்ளோம்’

Editorial   / 2018 ஜனவரி 02 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

“பரம்பரையாக நாங்கள் வாழ்ந்து தொழில் செய்த எமது நிலத்தைத் தர மறுத்து, புத்தாண்டிலும் எங்களை வீதியிலிருந்து போராட இந்த அரசாங்கம் விட்டிருக்கின்றது” என, பூநகரி - இரணைதீவு மக்கள் தெரிவித்துள்ளனர்.  

இரணைதீவுப் பிரதேசத்தில், நூற்றாண்டு காலம் மக்கள் தொன்மையாக வாழ்ந்த இடத்திலிருந்து அப்பகுதி மக்கள் கடந்த யுத்தம் காரணமாக வெளியேற்றப்பட்டபோதும், இன்று வரை அவர்களை அந்த நிலத்தில் சென்று வாழ்வதற்கான உரிமை வழங்கப்படாத நிலை காணப்படுகின்றது.  

கடந்த 2010ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின் போது, இந்த மக்கள் தங்களை மீள்குடியேற்றுமாறு வலியுறுத்தப்பட்டபோதும், பல்வேறு காரணங்களைக் காட்டி மக்கள் மீள்குடியேற்றம் தடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  கடந்த மே மாதம் 1ஆம் திகதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  
புத்தாண்டு தினத்திலும் வீதியில் போராடி வருகின்றனர்.  

இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள், எங்கள் நிலத்தில் நாங்கள் சென்று வாழ்வதற்கான உரிமையை, அங்கு தொழில் செய்வதற்கான உரிமையை விரைவாகப் பெற்றுத்தருமாறு தெரிவித்துள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .