2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பொதுஇடத்தில் கழிவுகளைக் கொட்டத் தடை

Editorial   / 2018 ஜனவரி 06 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

பருத்தித்துறை நகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில், திண்ணமக்கழிவுகள் பொதுஇடத்தில் கொட்டுதல் தடைசெய்யப்பட்டுள்ளதாக, பருத்தித்துறை நகரசபை செயலாளர் புவனேந்திரன் ரமேஸ்கரன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“திண்மக் கழிவுகளை பொதுஇடத்தில் கொட்டுதல் தடை செய்யப்பட்டுள்ளதோடு, நுளம்புப் பெருக்கத்துக்கு ஏதுவான சூழைல வைத்திருப்போர் மீது சட்ட நடிவடிக்கை எடுக்கப்படும்.

“மேலும், கழிவுப்பொருட்களை தரம் பிரித்து ஒழுங்கு படுத்தல் வேண்டும். உணவகங்கள் விடுதிகளில் இருந்து கழிவு அகற்றலுக்கான கட்ணம் அறவிடப்பட்டே சேவை வழங்கப்படும். 

“அத்தடன், அபிவிருத்தி செய்யப்படாத பற்றைக்காணிகளை துப்பரவு செய்யப்படுவதுடன், உணவு கையாளும் நிலைப் பணியாளர்கள் மருத்துவப் பரிசோதனையை மேற்கொண்டு அனுமதி பெற்றிருத்தல் வேண்டும்.

“நகரசபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில், கட்டாக்காலி நாய்கள், ஆடு, மாடுகளை அலைந்து திரிய அனுமதிக்கும் பொதுமக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். வியாபார நிலையங்களுக்கு முன்னால் பாதசாரிகள் போக்குவரத்துக்கு இடையூராக பொருட்கள் காட்சிப்படுத்தல் விற்பனை செய்தல் தடைசெய்யப்பட்டுள்ளது.

“சபையின் பொதுச்சந்தை இறைச்சிக்கடைகளில் இருந்து 500 மீற்றர் சுற்றாடலில் மரக்கறிகள், கடல் உணவுகள், இறைச்சிகள் விற்ப்பனை செய்வது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. மேற்படி விடயங்கள் தொடர்பில் பொதுமக்கள் மற்றும் தொடர்புபட்டோரின் கவனம் ஈர்க்கப்படுகின்றது. குறித்த அறிவித்தலின் பிரகாரம் செயற்படத் தவறுபவர்கள்  மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்”  எனத் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X